உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் இன்று நடந்தது.

28-04-2026 | 09:28


மேலும் இன்றைய போட்டோ

ஒரு பூவின் காதலை பூவிடம் கொண்டு சேர்க்கும் பட்டாம்பூச்சிக்கு தேன் துளிகளால் நன்றிக்கடன் செலுத்துகின்றனவோ பூக்கள்!. இடம்: உக்கடம் பெரியகுளம்.

28-04-2026 | 08:48


கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும், எர்ணாகுளம் சிவகுமார் யானையும், துதிக்கை உயர்த்தி வடக்குநாதரை வணங்கி உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.

28-04-2026 | 08:38


ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில், அனந்த்சரஸ் குளத்தில் விடையாற்றி தெப்ப உற்சவத்தில் ராமபிரான் மற்றும் ராமானுஜர் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

28-04-2026 | 08:22


சித்திரை பிரம்மோத்சவத்தின் நான்காவது நாளில் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

28-04-2026 | 08:19


உலகின் மிக நீளமான கடல் நடைபாலம் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.2 கி.மீ., நீளம் கொண்ட இப்பாலம் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியின் தீவுகளையும், நகர மைய பகுதியையும் இணைக்கும் ரம்மியமான நடைபாலமாக திகழ்கிறது.

28-04-2026 | 08:13


கடும் குளிர் என்பது ரஷ்யாவில் சகஜமானது. திடீரென 21 செ.மீ அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது 1880ம் ஆண்டுக்கு பின், ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச பனிப் பொழிவாகும். 80 கி.மீ., வேகத்தில் பனிக்காற்றும் வீசியது. கடும் குளிருக்கு இடையே மாஸ்கோவின் புகழ்பெற்ற சிவப்பு சதுக்கத்தில் நடந்து சென்றவர்கள்.

28-04-2026 | 08:09


நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் வெள்ளரிக்காய்க்கான தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட வெள்ளரிக்காய்களை விற்பனைக்காக தரம் பிரித்த தொழிலாளர்கள்.

28-04-2026 | 08:02


பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பிகானீரில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்த சிறுமி; ஹரியானா, குரூகிராமில் பொதுவெளியில் உள்ள குழாய் நீரில் உடலை குளிர்வித்த நபர்.

28-04-2026 | 07:56


திருவொற்றியூர் மாணிக்கம் நகர் பிரதான சாலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடக்கிறது .

27-04-2026 | 22:07