உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நாடி நரம்புகளாய் இயங்கும் ஒவ்வொரு உழைப்பாளியின் வியர்வையிலும், நம் நாட்டின் எதிர்காலம் செதுக்கப்படுகிறது; உயர்ந்த கோபுரங்களும், நவீன உலகமும் இவர்களது உழைப்பின் சாட்சிகள்.- இன்று (மே 1) உழைப்பாளர் தினம்

01-05-2026 | 07:15


மேலும் இன்றைய போட்டோ

காய்கறி மற்றும் தக்காளிப்பெட்டிகளை வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் தொழிலாளர். இடம்: உடுமலை (இன்று உழைப்பாளர் தினம்)

01-05-2026 | 06:45


தஞ்சாவூர் பெரியகோவில் அருகே சிவகங்கை குளம் அமைந்துள்ளது. இக்குளம் பெரியகோவிலில் இருந்து வரும் மழைநீரை சேமிக்கும் வகையில், ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. தீர்த்தகுளமாக விளங்கிய சூழலில், குளத்தில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

01-05-2026 | 06:40


இன்று (மே 01) உழைப்பாளர் தினத்தையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு வர்ணம் பூசும் தொழிலாளர்கள்.

01-05-2026 | 06:30


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று(மே 1) காலை 5.50 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.

01-05-2026 | 06:18


சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு என்னும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

30-04-2026 | 21:54


சென்னை தி நகரில் உள்ள ஶ்ரீ அகஸ்தியர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இடம் : தி நகர்

30-04-2026 | 21:54


சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வெப்பத்தை சமாளிக்க கையில் குடையுடன் வெளியில் வரும் பொதுமக்கள்.இடம் : ஓ எம் ஆர் , கந்தஞ்சாவடி

30-04-2026 | 21:54


சிவகங்கை அருகே பெருமாள்பட்டி கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

30-04-2026 | 21:53


தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள்.

30-04-2026 | 21:53