இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது. நெல்லிற்கான தொகை இதுவரை சில விவசாயிகளுக்கு வழங்கப் படவில்லை. கடந்த சில தில நாட்களாக பெய்த மழையில் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் முளைத்துள்ளன.
12-05-2026 | 06:49
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள செங்கால் நாரை பறவைகள் குஞ்சு பொரித்து உள்ளன.
16-05-2026 | 07:01
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
16-05-2026 | 06:57
பிரதமர் மோடியின் எளிமைக்கான அழைப்பை ஏற்று மேற்குவங்க பாஜ எம்எல்ஏ பிரதீப் குமார் பிஜாலி சைக்கிளில் சட்டசபைக்கு சென்றார். இடம்: கொல்கட்டா.
16-05-2026 | 06:57
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.
16-05-2026 | 06:56
கோவை சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தவெக., வினர்.
15-05-2026 | 16:00