உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது அடுத்து அங்குள்ள பார்களில் மதுபானம் விற்கப்படுகிறதா என சோதனையிடும் காரமடை போலீசார்

18-05-2026 | 14:54


மேலும் இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் அன்ந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிக் ஹீசைன், லஷ்கர் பயங்கரவாதி அடில் தோகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அனந்த்நாக்கில் பயங்கரவாதி அடில் தோகருக்கு சொந்தமான வீடடை இடித்து தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம்.

24-07-2026 | 06:48


திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி கிணறுகள் வற்றி போனதால், தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு பாயச்சிய விவசாயி. இடம்: பள்ளமடை, திருநெல்வேலி மாவட்டம்.

24-07-2026 | 06:37


குள்ளஞ்சாவடி பகுதியில் குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது.

23-07-2026 | 14:33


தூய்மை பணியாளர்களுக்கான அரசு சேவைகள் பெறுவது குறித்த முகாம் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.

23-07-2026 | 14:32


கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர்.

23-07-2026 | 14:32


பட்டா கேட்டும் தாசில்தாரை கண்டித்தும் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பாய் போட்டு உறங்கியும் பூ சுற்றியும் போராட்டம் நடத்தினர்.

23-07-2026 | 14:32


கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் அருகே உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் தினமும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன.

23-07-2026 | 14:32


முதல்வர் விஜய் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க., வினர் அன்னதானம் வழங்கினர்.

23-07-2026 | 14:31


முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க.,வினர் ரசிகர்களுக்கு லட்டு வழங்கினர்.

23-07-2026 | 14:31