உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கக்கூடிய மரக்கன்றுகள் மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் உள்ள மரக்கிடங்கில் தயாராக உள்ளது.

26-05-2026 | 19:23


மேலும் இன்றைய போட்டோ

ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை யொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்.

17-07-2026 | 12:05


ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை யொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

17-07-2026 | 12:05


பந்தலூர் குரூஸ் மலை அண்மையில் பெய்த பருவமழையால் பசுமைக்கு மாறியுள்ள காட்சி, மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

17-07-2026 | 06:51


வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம், உலகின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள இரண்டாவது முனையத்தின் அழகிய வெளிப்புற தோற்றம்.

17-07-2026 | 06:48


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் போதிய தண்ணீர் இன்றி, வறண்டு காணப்படுகிறது.

16-07-2026 | 21:56


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த தூளி கிராமத்தில், பயிர்களை காப்பாற்ற டேங்கர் லாரி வாயிலாக நிலத்திற்கு நீர் பாய்ச்சும் நிலை.

16-07-2026 | 21:55


திருப்பூர் காட்டு வளவு பகுதியில் ரோடு பழுதடைந்து பல மாதங்களாக சரி செய்யப்படுவதால், மா.கம்யூ கட்சி சார்பில் எச்சரிக்கை பலகை நட்டு வைத்து போராட்டம் நடத்தினர்.

16-07-2026 | 21:54


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் காமராஜர் நகர் பகுதியில், ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து, செங்கம் - கிளையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

16-07-2026 | 21:53


திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 4வது தொழில் கண்காட்சி திருமுடிவாக்கத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு துவக்கி வைத்தனர்.

16-07-2026 | 21:52