உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.

28-05-2026 | 17:42


மேலும் இன்றைய போட்டோ

மழை நீர் வடிகால் பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : யானை கவுனி மேம்பாலம் சந்திப்பு.

01-06-2026 | 15:45


புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சித்தி புத்தி சமேத ஸ்ரீ விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

01-06-2026 | 13:48


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

01-06-2026 | 13:47


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

01-06-2026 | 13:47


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.

01-06-2026 | 13:47


வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கால்நடைகளுக்கான தீவனத்தை எடுத்துச் செல்லும் பெண்கள். இடம்: மயிலம் ரோடு.

01-06-2026 | 13:46


விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள் அதிகாரிகள் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

01-06-2026 | 13:46


கள்ளக்குறிச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

01-06-2026 | 13:46


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்களின் கூட்டம்.

31-05-2026 | 23:32