உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டப்பட்ட பல தங்க சுரங்கங்கள் உள்ள கோல்ட்மைன்ஸ் அடர்ந்த வனப்பகுதி. தற்போதும் இங்கு அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன.

31-07-2026 | 06:31


மேலும் இன்றைய போட்டோ

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

01-08-2026 | 06:23


அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

31-07-2026 | 22:01


நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்

31-07-2026 | 22:00


ஜி.எஸ்.டி துறையை கண்டித்து பாத்திர கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்:தங்க சாலை, பூங்கா நகர்.

31-07-2026 | 21:59


​பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி ஆகாயத்தாமரை செடிகளைஅகற்றி பரிசல் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி தீவிரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

31-07-2026 | 21:58


ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

31-07-2026 | 21:56


எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..

31-07-2026 | 21:56


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கோடை விழா நிகழ்ச்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

31-07-2026 | 21:56


டில்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் அகில இந்திய பரிசு பொருட்கள் கண்காட்சி கிப்ட் எக்ஸ்போ அரங்குகளில் இடம்பெற்றுள்ள நவீன பரிசு பொருட்கள்

31-07-2026 | 21:56