இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வரும் 15ல் நாட்டின் சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து, பீஹார் மாநிலம் பாட்னாவில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட மகளிர் போலீசார்.
02-08-2026 | 07:14
மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கொத்ஷி அணைகள் வழியாக கிருஷ்ணா நதி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
02-08-2026 | 07:06
வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.
01-08-2026 | 06:28
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
01-08-2026 | 06:23
அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
31-07-2026 | 22:01
நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
31-07-2026 | 22:00