இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவையில் பல இடங்களில் இது போன்று தோண்டப்படும் சிறு குழிகளுக்கான வேலைகளை சீக்கிரம் முடித்தால் பாதசாரிகளின் பாதங்கள் நன்றி சொல்லும். இடம்: டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.
03-08-2026 | 07:15
கேரளாவில் மழை, கர்நாடகாவில் காவிரி பிரச்னை காரணமாக பெரும்பாலான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியரின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: குன்னூர் சிம்ஸ் பூங்கா.
03-08-2026 | 06:58
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலையை பந்தலில் வைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
03-08-2026 | 06:45
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில் பாலம் அமைந்துள்ளது. 4314 அடி நீளம், 44 அடி அகலம் நதியில் இருந்து 1,177 அடி உயரத்தில் அமைந்துள்ள செனாப் பாலத்தின் ஜம்முவின் காத்ரா- காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் இடையே பயணித்த வந்தே பாரத் ரயில்.
03-08-2026 | 06:41
தஞ்சாவூர் மாவட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் வயல்களில் குவிந்து நெற்பயிரை பிடுங்கி, தண்டுகளை உணவாக உட்கொண்டு வரும் அரியவகை பறவையான நீலத்தாழை கோழிகள். இடம்: தென்பெரம்பூர்.
03-08-2026 | 06:36
திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இன்றி வரண்டு வெடிப்புகளாக காட்சியளிக்கிறது...
02-08-2026 | 21:47