உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து சுந்தராபுரம் சங்கம் வீதியில் த.வெ.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

04-08-2026 | 13:26


மேலும் இன்றைய போட்டோ

பந்தலூர் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தேயிலை தோட்டங்களின் அழகிய காட்சி பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

04-08-2026 | 07:07


ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தொடங்கி 10 ஐரோப்பிய நாடுகள் வழியாக பாய்ந்து கருங்கடலில் கலக்கும் முக்கிய நதிகளில் ஒன்று டானூப் நதி. ருமேனியா நாட்டின் ரசோவா பகுதியில் பாயும் இந்நதியின் வழித்தடத்தில் நீர் குறைந்து மணல் திட்டுக்கள், பாறைகள் வெளியே தெரிந்தன.

04-08-2026 | 07:00


திருநெ ல்வேலி பாறையடி பகுதியை சேர்ந்த விவசாயியின் தோட்டத்தில் சேனைக்கிழங்கு செடியில் அரிதாக பூத்துள்ள உள்ளங்கை அளவுள்ள இந்த பூ, நான்கு நாட்களுக்கு மட்டுமே மலர்ந்திருக்கும்.

04-08-2026 | 06:54


பருவமழையை வரவேற்கும் தீஜ் பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பள்ளி ஒன்றில் பாரம்பரிய உடை அணிந்த மாணவியர் அலங்கரிக்கப்படட ஊஞ்சலில் உற்சாகமாக ஆடினர்.

04-08-2026 | 06:50


நம் நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியக் கொடிகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தொழிலாளர்கள்.

04-08-2026 | 06:44


இயற்கையின் இடையே மரங்களின் நிழலில் பசுமையுடன் கூடிய கட்டடங்கள் இன்னும் கொஞ்சம் தப்பித்து இருக்கிறது. கோவை மாநகரின் ஒரு பக்கத்தில். இந்த காட்சி வரும் காலத்தில் மாறாமல் இருப்பதே பசுமை வாழ்வதன் காட்சி. இடம்: வடவள்ளி.

03-08-2026 | 21:49


ஆடிப்பெருக்கு முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாற்றில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டனர்.

03-08-2026 | 21:49


ஆபத்தான முறையில் இருசக்கர வாகனம் ஒட்டி செல்லும் வாகன ஒட்டி. இடம்: எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூலக்கடை

03-08-2026 | 21:48


சதுப்பு நிலத்தில் உணவினை தேடும் பொழுது அங்கே இருக்கும் உயர் மின் கோபுரங்களின் உச்சியில் கூட்டமாக ஓய்வு எடுக்கும் கூழைக்கிடா பறவைகள்.இடம் : பெருங்குடி

03-08-2026 | 21:48