உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீரால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள பெரியபாணி பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.

07-08-2026 | 07:04


மேலும் இன்றைய போட்டோ

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.

07-08-2026 | 07:58


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

07-08-2026 | 07:58


திருநெல்வேலி கால்வாயில் தாமிரபரணி தண்ணீர் திறக்கப்படாததால் நடவுக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இடம்: டவுன் ரயில் நிலையம் அருகே.

07-08-2026 | 07:57


ஜோர்கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்து கிருஷ்ணன் குப்பம் பகுதியில் மக்காச்சோளம் மகசூல் ஜோர்.

07-08-2026 | 07:56


ஆடி கிருத்திகையையொட்டி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் வள்ளி,தெய்வானையுடன் முருகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

07-08-2026 | 07:55


விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் (சென்டர் மீடியன்) செடிகள் அதிகளவில் நடப்பட்டு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இடம். கடலூர்

07-08-2026 | 07:55


திருப்பூர் திருப்பதி கோவிலில் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பெருமாள்.

07-08-2026 | 07:55


கூடலூரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார் புன்னம்புழா ஆற்றின் நீர்.

07-08-2026 | 07:07


உத்தர பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நகரின் ஒரு பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

07-08-2026 | 07:00