இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஒடிஷா மாநிலத்தில் கனமழை கொட்டுகிறது. ஜாஜ்பூர் மாவட்டம் தசரத்பூரில் பைதரணி ஆற்றின் துணை நதியான கனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
16-08-2026 | 06:52
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இப்போதே விழா களைகட்டியுள்ளது. மும்பை பரேலில் விநாயகர் சிலை ஒன்றை பந்தலுக்கு எடுத்துச் சென்றபோது அந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
16-08-2026 | 06:48
உலக அதிசயங்களுள் ஒன்றான உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட குவிந்த சுற்றுலா பயணியர்.
16-08-2026 | 06:38
இன்பைனைட் ஷேட்ஸ் எனும் ஓவியக் கண்காட்சி நடத்தது.. இதில் இடம்பெற்ற ஓவியங்களை பார்வையிட்ட பெண்கள்.இடம்: நிறங்கள் தி ஆர்ட் கேலரி, அண்ணாநகர் கிழக்கு.
15-08-2026 | 19:47
தினமலர் கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் போரூர் ஓசியன் க்ளோரோபில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. இதில் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்
15-08-2026 | 19:47
சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் மாணவியர் தங்கள் முகங்களில் மூவர்ண கொடியின் வண்ணங்களை வரைந்து கொண்டனர்.
15-08-2026 | 06:49
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஐந்தாம் ஆண்டு காற்றாடி திருவிழா துவங்கியது. நாளை மறுநாள் வரை நடக்கும் இதில் நம் நாட்டு காற்றாடிகள் மட்டுமின்றி வெளிநாட்டு காற்றாடிகள் என 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
15-08-2026 | 06:43
தினமலர் நிர்வாகத்தினர் நேற்று முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இடமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி.
15-08-2026 | 05:18