உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆடி திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், சாந்த சொரூபிணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

19-08-2026 | 06:42


மேலும் இன்றைய போட்டோ

சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 28 ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று பெண்கள், தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கிகயிறு கட்டி அன்பை பகிர்ந்து கொள்வர். இதையொட்டி சென்னை சவுகார்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ராக்கி கயிறுகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெண்.

19-08-2026 | 22:33


ஓணம் பண்டிகைக்கு கேரளாவுக்கு அனுப்புவதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள நேந்திரம் வாழை அறுவடை பணிகள் தீவரம் அடைந்துள்ளன.

19-08-2026 | 22:33


மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையால், கோவை மேற்கு புறவழி சாலையை அவ்வபோது பனிமூட்டம் சூழும் ரம்மியமான காட்சி.

19-08-2026 | 22:33


குன்னூர் ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வரும் நாட்களில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

19-08-2026 | 06:43


ஓணம் பண்டிகையை முன்னிட்டு செண்டுமல்லி பூக்கள் அறுவடையில ஈடுபட்ட பணியாளர்கள். இடம்: தொண்டாமுத்தூர், கோவை.

19-08-2026 | 06:42


காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர், பிக் ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர்.

19-08-2026 | 06:42


கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இல்லம் நிறை பூஜையில் நெற்கதிருக்கு மலர் தூவிவழிபாடு நடந்தது.

18-08-2026 | 22:37


சட்டசபைக்கு வந்த பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணிக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள்.

18-08-2026 | 22:37


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கொட்டி சென்ற 3 டன் குண்டுமல்லி பூக்கள்.

18-08-2026 | 22:36