உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருதுநகருக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்றம் செய்வதை கண்டித்து சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

27-08-2026 | 19:04


மேலும் இன்றைய போட்டோ

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். அவர்களை அமைச்சர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இடம்: சென்னை விமான நிலையம்.

29-08-2026 | 10:59


புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

29-08-2026 | 10:57


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதற்காக தயாராகும் பொன் வண்ண மண்பாண்டங்கள்.

28-08-2026 | 22:18


பசுமை செழிக்கட்டும்: கவாத்து செய்யப்பட்ட மல்பெரி செடிகளில் இலைகள் தளிர்விட்டு பசுமை நிறைந்து காணப்படுகின்றன. இது காண்போரை வசீகரிக்கிறது. இடம்: திருப்பூர்,உடுமலை பெரியகோட்டை.

28-08-2026 | 22:17


குட்டையில் நீர் தேங்கி உள்ள நிலையில் அல்லிஇலைகள் வளர்ந்துள்ளன. இதில்மலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ' குடி'மகன்கள் குட்டையினுள் பீர்பாட்டில்களை வீசி உள்ளனர். இடம்: கோவை, பொள்ளாச்சி திவான்சாபுதூர்

28-08-2026 | 22:17


நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணிக்காக முதுமலையில் இருந்து இரண்டு கும்கியானைகள் வரவழகை்கப்பட்டுள்ளன.

28-08-2026 | 22:17


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வன ஊழியர்கள் தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ள அடர்ந்த வனவப்பகுதி சூழ்ந்த லார்ஸ்டன் மலைபகுதி.

28-08-2026 | 22:17


சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் துணைமேயர் சாரதா தேவி இருக்கையை மேடையின் கீழ் போட வேண்டும் என மேயர் ராமச்சந்திரன் கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்ததில் ஈடுபட்ட சாரதாதேவி.

28-08-2026 | 22:17


வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரேவடி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

28-08-2026 | 22:16