உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் மைய தடுப்புகள் இடையே உள்ள சந்து வழியாக பாதசாரிகள் ரோட்டை கடக்க முயன்று வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இடம்: குனியமுத்தூர்.

28-08-2026 | 15:48


மேலும் இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்ட கலைஞர்.

30-08-2026 | 07:18


நாம் நலம் வாழ பசுமைப்பரப்பு இன்னும் விரிய வேண்டும். இடம்:குழல்மன்னம், பாலக்காடு மாவட்டம், கேரள மாநிலம்.

30-08-2026 | 07:13


ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் புலிக்களி ஆட்டம் நடந்தது. உடல் முழுவதும் புலி போல வர்ணம் தீட்டியும், முகமூடி அணிந்தும் இடுப்பில் சலங்கைகள் கட்டியும் 450க்கும் மேற்பட்ட கலைஞர்கள் செண்டை மேள தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடி நகரை வலம் வந்தனர்.

30-08-2026 | 07:06


நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் பெருவெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் கட்டடங்களை சுற்றி சேறும், சகதியும் காணப்படுகிறது.

30-08-2026 | 06:58


டில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பாஜவை சேர்ந்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பவுலிங் போட மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேட்டிங் செய்தார்.

30-08-2026 | 06:54


நம் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 97 வயதான குனா மாயா போஹ்ரா என்ற மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். மரணத்தை வென்ற மூதாட்டி என குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.

30-08-2026 | 06:47


நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

30-08-2026 | 06:42


உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இன்றி அன்றாடம் உழைக்கும் வர்க்கமாக தொழிலாளர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் தூய்மை பணியாளர்கள். இடம்: வேலூர் சாலை, திருவண்ணாமலை.

29-08-2026 | 15:46


நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர். அவர்களை அமைச்சர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இடம்: சென்னை விமான நிலையம்.

29-08-2026 | 10:59