உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற விழாவில் பகவான் ஜெகன்நாதர், பலராமர், சுபத்ரா தேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

04-09-2026 | 13:17


மேலும் இன்றைய போட்டோ

வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெய்ந்தியை முன்னிட்டு மனித கோபுரம் அமைத்து உறியடிக்கும் நிகழ்ச்சி பிரபலம். இது வெறும் விளையாட்டல்ல; ஒற்றுமை, பலம் மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழச்சியில் பங்கேற்றோர்.

06-09-2026 | 06:45


தொடர் கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் பீஹாரின் பாட்னாவில் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள வீட்டை வெள்ள நீர் பகுதியளவு மூழ்கடித்தது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

06-09-2026 | 06:40


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இடம்பெற்றுள்ள மலர் செடிகள்.

05-09-2026 | 13:33


சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

05-09-2026 | 13:32


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாணவிகள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

05-09-2026 | 13:02


சங்க காலத்தில் மலை வெள்ளமும், மழை வெள்ளமும் பாய்ந்தோடிய வைகை, கால வெள்ளத்தில் கரைந்தோடி களையிழந்து போனாலும், மங்கையவள் ஆளும் மதுரையம்பதியோ மாற்றத்தை ஏற்று கான்கிரீட் காளான்களால் நிறைந்து நம்மனமகிழ பருந்துப் பார்வையில் விருந்து படைக்கிறது.

04-09-2026 | 22:42


கும்பாபிஷேகம் நெருங்குவதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியின் வெளிப்பிரகார கலையலங்காரம் வண்ணமயமாக ஜொலித்து கண்களை விரிய வைக்கிறது.

04-09-2026 | 22:41


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெருக்கெடுத்து ஓடும் வருணா நதிக்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

04-09-2026 | 22:41


இஸ்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் சென்னை மாமல்லபுரம் சாலையில் அக்கரை என்ற இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவிலின் சிறப்புஅலங்காரத்தில் அருள் பாலித் கிருஷ்ணர் ராதை.

04-09-2026 | 22:40