இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை வால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி காட்சி முனையில் இருந்து மேல் ஆழியாறு அணையின் எழில்மிகு தோற்றம், பள்ளத்தாக்கு போன்றவை சுற்றுலா பயணியர் மனதை கவர்ந்துள்ளது.
08-09-2026 | 23:03
முதுமலையில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் வன பகுதிகள் பசுமையாக மாறி உள்ளதால் சாலையோரங்களில் உலா வரும் மான் கூட்டம்,சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
08-09-2026 | 23:03
ஆதம்பாக்கம் - ஆலந்தூர் இடையே முறையான நடைமேம்பாலம் இல்லாததால், ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள். இடம் : ஆலந்தூர்
08-09-2026 | 14:40
அன்னை வேளாங்கண்ணி மாதா சர்ச் 54ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது. தேர் பவனியில் திரளாக பங்கேற்ற பக்தர்கள். இடம்: பெசன்ட் நகர்.
08-09-2026 | 06:38
பருவமழை காரணமாக புன்புன் நதியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ள குடியிருப்புகள். இடம்: பாட்னா, பீஹார்.
08-09-2026 | 06:38
வரும் 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மஹாராஷ்டிராவின் மும்பையில் புகழ்பெற்ற லால்பாக் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும், லால்பாக் ராஜா என அழைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் வெள்ளியால் ஆன பாரம்பரிய நகைகளை சரிபார்த்த விழா குழுவினர்.
08-09-2026 | 06:37
குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.
07-09-2026 | 22:18