இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தூத்துக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதால் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகள் அப்படியே தேக்கமடைவதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
10-09-2026 | 16:28
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
10-09-2026 | 16:26
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை, சுண்டக்காமுத்தூரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10-09-2026 | 16:23
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இளம் விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் கண்களில் கருப்பு துணி கட்டி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-09-2026 | 16:23
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் ஸ்கேட்டிங் போட்டியில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாணவர்கள்.
10-09-2026 | 16:22