இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பீஹாரில் கனமழை காரணமாக கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவை ஒட்டிய திதரகஞ்ச் பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய வெள்ள நீர்.
11-09-2026 | 06:30
விநாயகர் சதுர்த்தி வரும் 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிலக்கடலையால் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
11-09-2026 | 06:26
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் ஆரம்ப மருத்துவ நிலையத்தில் மின் தடையால் மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
11-09-2026 | 06:23
கொடைக்கானல் என்றாலே சுற்றுலா தலம் என்று நினைக்கும் பலருக்கும் விவசாய பூமியுடன் கூடிய இந்த ஒரு சிறு கிராமமும் கண்ணுக்கு இனிய சொர்க்க பூமி தான். இடம்: பூம்பாறை.
10-09-2026 | 22:29
சுகாதாரமற்ற முறையில் ஆம்லெட் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தும் வெங்காயம் பச்சை மிளகாய்களை ரோட்டின் அருகே திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவம். இடம்: போத்தனூர்.
10-09-2026 | 22:29
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம், சமத்துவபுரம் பகுதிகளில் தண்ணீரை பிடிக்க காலி குடங்களுடன் காத்திருந்த பெண்கள்..
10-09-2026 | 22:28
விபத்தில் சிக்கும் வகையில் ஆபத்தை உணராமல் மின்சார ரயில்களில் வெளியில் தொங்கியபடி செல்லும் பயணிகள்.இடம் : கிண்டி
10-09-2026 | 22:28