உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ்- சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2026 ல் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்இடம் : தாம்பரம்

14-09-2026 | 20:54


மேலும் இன்றைய போட்டோ

நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர்.

14-09-2026 | 22:33


வார இறுதி தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

14-09-2026 | 22:33


 விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று(செப் 14) சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

14-09-2026 | 22:33


 விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று(செப் 14)  திருச்சி, மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையை படையலிட துாளியில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

14-09-2026 | 22:33


'கல்வியே கடவுள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலை, சென்னை மணலி, பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. 2,000 முகம் பார்க்கும் கண்ணாடி, 1,800 குங்கும சிமிழ் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட இந்த சிலை, காண்போரை கவர்ந்து வருகிறது.

14-09-2026 | 22:33


மருத்துவ குணம் மிக்க பிரம்ம கமலம் ஆண்டுக்கொரு முறை இரவில் மட்டுமேமலரும். கோவை துடியலூர் முத்துநகரில் ஒரு வீட்டில் நள்ளிரவில் பூத்திருந்த பிரம்ம கமலம்.

14-09-2026 | 22:32


மொரட்டாண்டி சனீஸ்வரர் பகவான் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 54 அடி உயர கிரக சாந்தி விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.

14-09-2026 | 20:55


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புழல் கதிர்வேடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள வண்ணமயமான விநாயகர் சிலை.

14-09-2026 | 20:55


சென்னை அண்ணாநகர் பகுதியில் திருமலை திருக்குடை ஊர்வலம் நடந்தது

14-09-2026 | 20:55