உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூரில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், காலேஜ் ரோடு, எஸ்ஏடி மைதானத்தில் நடந்தது. இதில் கூடை பந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

18-09-2026 | 14:30


மேலும் இன்றைய போட்டோ

கோவை நேரு ஸ்டேடியத்தில் மூத்தோர்களுக்கான தடகள போட்டியில் நடந்து செல்லும் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்.

20-09-2026 | 12:59


வடலூர் சன்மார்க்க சேவை மையம் சார்பாக சத்திய ஞான சபையில் தொண்டர்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

20-09-2026 | 12:58


நீர்மட்டம் குறைந்து பாளம் பாளமாக வெடித்து காணப்படும் உடுமலை ஒட்டுக்குளம்.

20-09-2026 | 12:58


நம் நாளிதழில் விவசாயிகளின் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து செய்தி வெளியானது; நெல் முளைத்து விட்டால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவர் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது மழையில் நெல் நனைந்து முளைவிட்டதை, காட்டும் விவசாயி. இடம்: காவாந்தண்டலம் அரசு நெல் கொள்முதல் நிலையம், காஞ்சிபுரம்.

20-09-2026 | 07:59


மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் வரிக்குதிரை உடலில் காணப்படும் கோடுகளை போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் உலா வந்த வரிக்குதிரைகள். இது பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களையும், குழந்தைகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது.

20-09-2026 | 07:51


தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரின் பாரம்பரியச் சின்னமான மைசூரு அரண்மனை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சாரல் மழையின் போது அரண்மனை பின்னணியில் தோன்றிய அழகான வானவில்.

20-09-2026 | 07:47


புதுச்சேரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் போது ஏற்பட்ட மின்னல். இடம்: புதுச்சேரி குருமாம்பேட்.

20-09-2026 | 07:42


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்கள்.

20-09-2026 | 07:39


ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

20-09-2026 | 07:13