உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை விமான நிலையத்தில் புதிதாக மக்கள் பயன்பட்டிற்கு திறக்கப்பட்டுள்ள பிளாசா பிக்கப் பாயிண்ட் பகுதியில் மின்விசிறி இல்லாததால் வெயிலின் புழுக்கத்தால் அவதிப்படும் பயணியர்

18-09-2026 | 18:04


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி பின்னாச்சிகுப்பம் செரின் பெலிகன் வில்லா ஓனர்ஸ் அசோசியேஷனில் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசினார்.

19-09-2026 | 23:37


திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி தண்ணீரில் சிக்கி கொண்ட வாகனத்தை தள்ளி சென்றனர்.

19-09-2026 | 23:37


விழுப்புரத்தில் இரவு மழை பெய்ததில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.

19-09-2026 | 23:37


புதுச்சேரியில் இரவு சுமார் 7 மணி அளவில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது.

19-09-2026 | 23:37


தூத்துக்குடி மாட்டம் கட்டாரிமங்கலம் பகுதியில் நிலவும் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள விவசாய பணிக்கு நடுவே வயற்காட்டினுள் பனை ஓலையால் குடை அமைத்து அதன் கீழ் விவசாயிகள் இளைப்பாறி வருகின்றனர்.

19-09-2026 | 08:28


நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களை தெய்வமாக வணங்கும் ஆயுத பூஜையை போலவே, வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை நடத்தப்படுகிறது. மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திப்பூர் ரயில் நிலையத்தில் நடந்த விஸ்வகர்மா பூஜையில் மின்சார ரயிலுக்கு பூஜை செய்த ஊழியர்கள்.

19-09-2026 | 08:23


சென்னையில் துறைமுகம்- மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பால திட்டத்தில் தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் ஜரூராக நடக்கிறது. இடம்: எத்திராஜ் சாலை, எழும்பூர்.

19-09-2026 | 08:14


நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் கருவகள், இயந்திரங்கள், வாகனங்களை தெய்வமாக வணங்கும் ஆயுதபூஜையை போலவே, வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜை நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் சாந்திபூர் ரயில் நிலையத்தில் நடந்த விஸ்வகர்மா பூஜையில் மின்சார ரயிலுக்கு பூஜை செய்த ஊழியர்.

18-09-2026 | 22:29


இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, தமிழக பக்தர்கள் சார்பில் ஒன்பது வெண்பட்டு திருக்குடைகளை திருமலையில் இன்று( செப்.,18)ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டார். உடன், தேவஸ்தான தலைமை விஜிலென்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி எஸ்.பி., சுப்பராயுலு, தேவஸ்தான உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தலைவர் ஸ்ரீதர் வர்மா.

18-09-2026 | 22:29