இன்றைய போட்டோ
பருவமழை காலம் தொடங்கும் முன்பான வெப்பம், ஈரப்பதம் மற்றும் தாவர வளர்ச்சி அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தையொட்டி சென்னையில் ஆங்காங்கே உள்ள எருக்கஞ்செடிகளில் வண்ணத்துடன் கூடிய வண்ண வெட்டுக்கிளிகள் (Painted Grasshopper) அதிகளவில் காணப்படுகிறது. நீலம், மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் உடல் முழுவதும் பட்டைகள் கொண்ட இந்த வெட்டுக்கிளி, எருக்கஞ்செடியின் இலை மற்றும் மென்மையான தாவரப் பகுதிகளை உணவாக உட்கொள்கிறது..இடம் : வேளச்சேரி
04-10-2026 | 19:44
மேலும் இன்றைய போட்டோ
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்ஸவத்தில் உற்ஸவர் பத்மாஸனித்தாயார், கல்யாண ஜெகநாத பெருமாள். இடம் : திருப்புல்லாணி.
09-10-2026 | 20:36
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
09-10-2026 | 19:46
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.
09-10-2026 | 19:43
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-10-2026 | 17:06