இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக தசரா பண்டிகை அன்று ராவணனை ராமர் வதம் செய்யும் நிகழ்வு வட மாநிலங்களில் நிகழ்த்தப்படுவது வழக்கம். இதற்காக ராவணன் உருவ பொம்மைகளை கடையில் இருந்து வாங்கி சென்ற சிறுவர்கள். இடம்: மீரட், உத்தரபிரதேசம்.
20-10-2026 | 07:14
இரையை தேடி தென்னந்ததோப்புகளில் வலம் வரும் மயில் காண்போரை கவர்ந்திழுக்கிறது. இடம்: உடுமலை.
20-10-2026 | 07:03
ஊட்டியின் இயற்கை அழகையும், குளிர்ந்த சூழலையும் விவரிக்கும் ஒரு அழகான படகு இல்ல ஏரியில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலைகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
20-10-2026 | 05:54
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 9ம் நாளான நேற்று, சிவபூஜை அலங்காரத்தில் அம்மன்.
20-10-2026 | 05:54
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில், முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
20-10-2026 | 04:42
நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று, மதுரை பெத்தானியாபுரம், தேவி கருமாரியம்மன் கோவிலில், சிவனுக்கு அம்மன் அபிஷேகம் செய்யும் சிறப்பு அலங்காரத்தில், சக்தி கொலுவில் பக்தர்களுக்கு அரும்பாலித்த அம்மன்.
20-10-2026 | 04:03