இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படகு. இடம்: ஈஞ்சம்பாக்கம்.
21-10-2026 | 08:58
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை தொடர்ந்து எரிக்கப்பட்ட கார்.
21-10-2026 | 08:14
செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ‘தினமலர்– பட்டம்’ இதழ், சார்பில் நடந்த வித்யாரம்பம் ஆரம்ப நிகழ்ச்சியில், (இடமிருந்து வலம்) செஞ்சி பார் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணன், தாசில்தார் ஏழுமலை, டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ், சுகாதாரத்துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ரமேஷ் பாபு, சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கலைச்செல்வன், சாரதா நர்சரி பள்ளி தாளாளர் புரட்சி செல்வன் ஆகியோர் குழந்தைகளின் கையை பிடித்து நெல்லில் அ.. ஆ.. எழுதி கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர். அடுத்த படம்: நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர்.
21-10-2026 | 00:44
கலவரத்தில் எரிந்து எலும்புக்கூடான கார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில், வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாகவும் கொள்ளையாகவும் மாறியதைத் தொடர்ந்து, எரிக்கப்பட்ட கார் ஒன்றை பொதுமக்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.
20-10-2026 | 20:44
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா நிறைவு நாளான நேற்றிரவு நடந்த சூரசம்ஹாரத்தில் பல்வேறு வேடமணிந்த பக்தர்கள்.
20-10-2026 | 19:56
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ (இடதுபுறம்), இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இடம்:மும்பை
20-10-2026 | 19:02
படம் கிஷன்செய்தி ஆறுமுகம் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து நடத்திய அ னா, ஆ வன்னா அரிச்சுவடி ஆரம்பம், நிகழ்ச்சி நேற்று கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்லாமிய குழந்தையை நெல்மணிகளில் அ என்று எழுத எழுத்தாளர் சுவாமிநாதன்.
20-10-2026 | 19:02