உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆயுத பூஜையை முன்னிட்டு சுவாமி கும்பிடுவதற்காக தங்களது வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவுகின்றனர். இடம்.உடுமலை அருகே பெரியகோட்டை.

19-10-2026 | 14:45


மேலும் இன்றைய போட்டோ

இரையை தேடி தென்னந்ததோப்புகளில் வலம் வரும் மயில் காண்போரை கவர்ந்திழுக்கிறது. இடம்: உடுமலை.

20-10-2026 | 07:03


ஊட்டியின் இயற்கை அழகையும், குளிர்ந்த சூழலையும் விவரிக்கும் ஒரு அழகான படகு இல்ல ஏரியில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலைகளை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

20-10-2026 | 05:54


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 9ம் நாளான நேற்று, சிவபூஜை அலங்காரத்தில் அம்மன்.

20-10-2026 | 05:54


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில், முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

20-10-2026 | 04:42


கேரள மாநிலம் மூணாறு அருகே ஆனக்குளம் ஆற்றில் குளித்த காட்டு யானைகள்.

20-10-2026 | 04:24


நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று, மதுரை பெத்தானியாபுரம், தேவி கருமாரியம்மன் கோவிலில், சிவனுக்கு அம்மன் அபிஷேகம் செய்யும் சிறப்பு அலங்காரத்தில், சக்தி கொலுவில் பக்தர்களுக்கு அரும்பாலித்த அம்மன்.

20-10-2026 | 04:03


மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் 1976 ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.

19-10-2026 | 21:26


கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நேற்று வினாடிக்கு, 2,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை முன்புள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி, தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீர்.

19-10-2026 | 18:17


தொடர் மழையால் முல்ளைப்பெரியாறு தடுப்பணையில் ஆர்ப்பரித்து சென்ற தண்ணீர். இடம் : சீலையம்பட்டி - குச்சனூர் ரோடு.

19-10-2026 | 17:54