இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக, தசரா பண்டிகை அன்று, ராவணனை ராமர் வதம் செய்யும் நிகழ்வு வட மாநிலங்களில் நிகழ்த்தப்படுவது வழக்கம். இதற்காக ராவணன் உருவ பொம்மைகளை கடையில் இருந்து வாங்கி சென்ற சிறுவர்கள். இடம்: மீரட், உத்தர பிரதேசம்.
20-10-2026 | 04:59
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில், முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
20-10-2026 | 04:42
நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று, மதுரை பெத்தானியாபுரம், தேவி கருமாரியம்மன் கோவிலில், சிவனுக்கு அம்மன் அபிஷேகம் செய்யும் சிறப்பு அலங்காரத்தில், சக்தி கொலுவில் பக்தர்களுக்கு அரும்பாலித்த அம்மன்.
20-10-2026 | 04:03
மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் 1976 ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.
19-10-2026 | 21:26
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நேற்று வினாடிக்கு, 2,450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை முன்புள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி, தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீர்.
19-10-2026 | 18:17