இன்றைய போட்டோ
தசரா கொண்டாட்டம் ஜொலிக்கும் பிரயாக்ராஜ். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தசரா திருவிழா ராமாயணக் கதைக் காட்சிகளை நினைவூட்டும் வகையில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.முக்கிய விழா நாளான நேற்று நகரின் வீதிகள், சந்தைகள் மற்றும் கோயில்கள் கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
21-10-2026 | 18:54
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
24-10-2026 | 22:54
திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் முன்பு ரெஸ்டாரண்ட் அமைப்பதற்காக ரயில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:53
புதுச்சேரி காமராஜ் மணிமண்டபத்தில் அஞ்சு மண் அறிவு திருவிழா சார்பில் நடந்த கண்காட்சியில் பழம்பெரும் நாணயங்களை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்
24-10-2026 | 22:51
ஐக்கிய நாடுகள் தினத்தை ஒட்டி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடிக்கு அருகே ஐ.நா., கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
24-10-2026 | 22:50
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
24-10-2026 | 22:50