இன்றைய போட்டோ
டில்லி மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்களுக்கு, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என, டில்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. அரசின் இந்த முடிவால், மாநகராட்சியின், 4,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது. மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் பயிற்சி நர்சுகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றையும் அரசு உயர்த்தியது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் நேற்று நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
23-10-2026 | 19:14
மேலும் இன்றைய போட்டோ
கோவை ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில் நடந்த உபன்யாசத்தில் பூஜ்ய ஸ்ரீ ரமணசரண தீர்த்த சுவாமிகள் பேசினார்.
23-10-2026 | 23:09
புதுச்சேரியில் பெய்த மழையில் தத்தளித்த மரவட்டை பூச்சிக்கு படகாக உயிர் கொடுத்த முக கவசம்
23-10-2026 | 23:09
திருப்பூர், மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவிகள்.
23-10-2026 | 23:08
புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லூயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி காமிக்ஸ் (சித்திர கதை) புத்தகங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள்.
23-10-2026 | 23:08