உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில், ‘அர்னாப்’ எனப்படும் தீவிரப் புயல் கரையை நெருங்குவதை ஒட்டி, அப்பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ராட்சத அலைகளும் அடித்து வருகின்றன.

27-10-2026 | 20:44


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இயற்கை விளைபொருட்கள் விற்பனை துவங்கியது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.

01-11-2026 | 22:08


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் பணியாளர்கள்.

01-11-2026 | 22:08


விடுமுறை நாள் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

01-11-2026 | 22:05


பருவமழை காலத்தில் வலசை வரும் ஆசிய குடை நாரை பறவைகள் உடுமலை பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளன.

01-11-2026 | 22:03


பச்சை இலைகளின் நடுவே மெல்ல நகர்கிறது வெண்மேகம், தொட்டு தழுவும் குளிர்காற்றில் மரங்களின் வாசம் காற்றில் வீச இதமான இந்த சூழல் தந்திடுமே வாழ்க்கையின் ஆகச்சிறந்த நிம்மதி.

01-11-2026 | 22:02


தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு செ ன்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.

01-11-2026 | 22:02


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 'யுவாதாரா' நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சீருடையில் அமர்ந்துள்ளனர். இடம்: ஜம்மு.

01-11-2026 | 22:02


நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு முந்தைய கடைசி ஞாயிறு என்பதால் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க சாலையோர கடைகளில் திரண்ட கூட்டம். இடம்: ஆமதாபாத், குஜராத்'

01-11-2026 | 22:02


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான ஏழாம் நாள் தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பு சங்கிலிகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

01-11-2026 | 22:02