இன்றைய போட்டோ
மத்தியப் பிரதேச மாநிலம் சாஜப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கருமான் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை கூட்டமாக வந்து பயிர்களை தின்று நாசம் செய்வதால், அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக இங்குள்ள மான்களை குனோ தேசியப் பூங்காவிற்கு வனத்துறையினர் மாற்றிவருகின்றனர்,புதிய இடத்திற்கு துள்ளிக்குதித்து வரும் மான்கள்.
28-10-2026 | 20:25
மேலும் இன்றைய போட்டோ
ஸ்ரீநகரில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற விழிப்புணர்வு பேரணியில், தேசியக்கொடியை ஏந்தி உற்சாகமாக பங்கேற்ற பாதுகாப்புப் படை வீரர்கள்.
31-10-2026 | 21:54
முப்பெரும் விழா திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்லூரி தலைவர் ராமசாமி கேடயம் வழங்கினார்.
31-10-2026 | 21:29
வட மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளை ஒளிரவைக்கும் விளக்குகளுக்கு எப்போதும் முதன்மை இடம் உண்டு. மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, வீடுகளை அலங்கரிக்க சாலைவோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
31-10-2026 | 20:36
குங்குமப்பூ தயாரிக்கப்படும் குரோக்கஸ் மலர்கள் ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் விளைகிறது. ஸ்ரீநகர் அருகே பாம்பூர் கிராமத்தில் குரோக்கஸ் மலர் அறுவடை மும்முரமாக நடக்கிறது.
31-10-2026 | 20:36
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் நேராக கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
31-10-2026 | 18:50
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி காண ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இடம்: சாம்பவர் வடகரை, தென்காசி.
31-10-2026 | 18:47