இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பழக்க, வழக்கம் மதுரை ரிங்ரோடு பாண்டிகோயிலில் விசேஷ நாளென்றாலும், விடுமுறை நாளென்றாலும் கோலாகல கூட்டமும், அதனால் நீள்வது நெரிசலும், அதன்பின் வாகன ஓட்டிகளுக்கு மனஉளைச்சலும் உருவாவது வழக்கம். இப்பிரச்னைக்கு தீர்வு காணாததுதான் அதிகாரிகளுக்கு பழக்கம்.
01-11-2026 | 20:36
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி சார்பில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகரில் நடந்தது.
01-11-2026 | 19:54
சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள். இடம். செனடாஆப் சாலை தேனாம்பேட்டை.
01-11-2026 | 19:54
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, பழைய துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
01-11-2026 | 19:54
சென்னையில் நண்பகலில் வீசிய பலத்த காற்றால் கடற்கரை சாலையில் தூசிபோல் அடித்து வரப்பட்ட கடல் மண். இதனால் முகத்தை மூடியபடி செல்லும் பொதுமக்கள். இடம்: பாலவாக்கம்.
01-11-2026 | 19:50
தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.
01-11-2026 | 19:47