உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பூங்கா இல்லாவிட்டாலும், சாலையோரத்தில், பெற்றோரின் பார்வையில் மகிழ்ச்சி குறையாமல் விளையாடும் குழந்தைகள். இடம் : கோவை, ரயில்நிலையம் அருகே

30-10-2026 | 18:58


மேலும் இன்றைய போட்டோ

ஸ்ரீநகரில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற விழிப்புணர்வு பேரணியில், தேசியக்கொடியை ஏந்தி உற்சாகமாக பங்கேற்ற பாதுகாப்புப் படை வீரர்கள்.

31-10-2026 | 21:54


வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த இயற்கையின் கு(கொ)டை. இடம்: கோவை குற்றாலம்.

31-10-2026 | 21:29


முப்பெரும் விழா திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்லூரி தலைவர் ராமசாமி கேடயம் வழங்கினார்.

31-10-2026 | 21:29


வட மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளை ஒளிரவைக்கும் விளக்குகளுக்கு எப்போதும் முதன்மை இடம் உண்டு. மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, வீடுகளை அலங்கரிக்க சாலைவோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.

31-10-2026 | 20:36


குங்குமப்பூ தயாரிக்கப்படும் குரோக்கஸ் மலர்கள் ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் விளைகிறது. ஸ்ரீநகர் அருகே பாம்பூர் கிராமத்தில் குரோக்கஸ் மலர் அறுவடை மும்முரமாக நடக்கிறது.

31-10-2026 | 20:36


திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் நேராக கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.

31-10-2026 | 18:50


வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி காண ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இடம்: சாம்பவர் வடகரை, தென்காசி.

31-10-2026 | 18:47


சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் தேனாம்பேட்டையில் இருந்து சேப்பாக்கம் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம். ஆயிரம் விளக்கு

31-10-2026 | 18:42


விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை பாரிமுனை குரலகம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

31-10-2026 | 18:41