இன்றைய போட்டோ
தொடங்கியது முன்பனிக் காலம் மார்கழியின் அதிகாலைகளில் மட்டுமே பழகிய கண்களுக்கு, இந்த ஐப்பசியிலேயே ஒரு பனிக்காட்சி! அவிநாசி அடுத்த ராமநாதபுரத்தில், மரங்களின் உச்சியைத் தொட்டு, பாதைகளின் வழியே இறங்கி, ஊரையே தன் மெல்லிய வெண்போர்வைக்குள் மூடியிருக்கிறது பனி. கார்த்திகை பிறப்பதற்கு முன்பே தொடங்கியிருக்கும் இந்தப் பனிப்பொழிவு, மக்களுக்கு இதமான குளிரைத் தந்தாலும், மாறிவரும் பருவநிலையின் முன்னறிவிப்பா என்ற கேள்வியையும் விட்டுச் செல்கிறது.
30-10-2026 | 21:14
மேலும் இன்றைய போட்டோ
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-11-2026 | 07:00
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
12-11-2026 | 06:58
திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர்.
12-11-2026 | 06:57
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கின் மூலம் தெரிவித்தனர்.
12-11-2026 | 06:55
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்து வரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
11-11-2026 | 22:34
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாமில் இருந்து அழைத்துவரப்பட்டு, முதல் விழா கந்த சஷ்டி விழாவில், சுவாமி உடன் மாட வீதி வலம் வந்த யானை நமச்சிவாயம்
11-11-2026 | 22:34