இன்றைய போட்டோ
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள புகழ்பெற்ற ‘ஹர் கி பௌரி’ பகுதிக்கு அருகே, வறண்டு காணப்படும் கங்கை நதிக்கரையில் மிஷ்ரி மத் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளா முன்னேற்பாடாக, பராமரிப்புப் பணிகளுக்காகக் கங்கையில் நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
31-10-2026 | 17:04
மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-11-2026 | 12:20
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.
12-11-2026 | 11:57
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
12-11-2026 | 07:00
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-11-2026 | 07:00