இன்றைய போட்டோ
காலியானது வேலி மதுரை கீழக்குயில்குடி மலையில் உள்ள சமணர் படுகைக்கு செல்லும் வழியில் தடுப்பு வேலி பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. அடுத்தபடம்: பாறையில் செதுக்கிய சிற்பங்களை பாதுகாக்க அமைத்த வேலியும் சேதமடைந்து கிடக்கிறது.
10-11-2026 | 10:02
மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-11-2026 | 12:20
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.
12-11-2026 | 11:57
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
12-11-2026 | 07:00
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
12-11-2026 | 07:00