இன்றைய போட்டோ
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மூவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் மணிக்கூண்டு அருகே பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12-11-2026 | 18:54
மேலும் இன்றைய போட்டோ
அனைத்து மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி அரங்கில் நடந்தது.
12-11-2026 | 18:35
கந்த சஷ்டி மூன்றாம் நாளில், திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி மஞ்சள் நிற பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
12-11-2026 | 18:35
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான ஒத்திகை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
12-11-2026 | 18:34
ரொம்பதான் தைரியம்... மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
12-11-2026 | 18:34
செடிகளை தாக்கும் நுரை பூச்சி உருவாக்கிய பாதுகாப்பு கவசமான நுரையில் இருந்து வடிந்த நீர். இடம்: உத்தரகோசமங்கை.
12-11-2026 | 18:34
கந்த சஷ்டி 3வது நாளில் கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோவிலில் வெள்ளை சாந்து அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.
12-11-2026 | 18:34