உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான நேற்று, திருவண்ணாமலை கிரிவலப் பாதை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

12-11-2026 | 22:49


மேலும் இன்றைய போட்டோ

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது..

12-11-2026 | 22:44


திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கு கபடி போட்டி நடந்தது. இதில் ஆக்ரோஷமாக விளையாடிய மாணவிகள்.

12-11-2026 | 22:44


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

12-11-2026 | 22:44


முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்பு குழுவினர்.

12-11-2026 | 22:44


கோவில் வாசலில் வள்ளி கும்மி நடனம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளான்று( நவம்பர் 12) கோவில் வளாகத்தில் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சி நடந்தது.

12-11-2026 | 22:43


மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் நால்ரோடு அருகே பிரதான குடிநீர் குழாய் உடைந்து வீணாக தண்ணீர் செல்கிறது.

12-11-2026 | 21:57


ஆறு வருடங்கள் ஆகியும் பால வேலையை முடிக்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகத்தால் அவதிப்படும் அப்பாவி மக்கள்... சிறுமுகை அடுத்த லிங்காபுரம்காந்தவயல்.

12-11-2026 | 21:57


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை,சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் மற்றும் வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ் சந்தித்து பேசினார். இடம்:விஜயவாடா,ஆந்திரா

12-11-2026 | 21:46


கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-11-2026 | 20:08