இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திண்டிவனம் ஜே.வி.எஸ்.மகாலில் கோதண்டராமன் மகன் டாக்டர் கபிலன், செந்தில்குமார் மகள் டாக்டர் ஸ்ரீஹரிணி திருமணம் நடந்தது.
13-11-2026 | 18:05
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்குக் கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்வைச் சென்னை பெரம்பூரில் உள்ள பள்ளியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கிருந்த ஒரு மாணவனைத் தனது இடுப்பில் அன்புடன் தூக்கி வைத்துக் கேக் ஊட்டி மகிழ்ந்தார்.
13-11-2026 | 17:56
சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில்,பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது.இதில் பங்கேறறு தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.
13-11-2026 | 17:56
காரைக்கால், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீச்சுரர் கோவில் கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
13-11-2026 | 17:55
காற்று அபாய நிலையில் இருந்த நிலையிலும், சாத் பூஜையின் முதல் நாளான நேற்று அதிகாலை, டில்லி ஐ.டி.ஓ., அருகே யமுனை நதியில் புனித நீராடிய பெண்கள்.
13-11-2026 | 17:54