உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், பி. என் ரோடு, வெங்கடேசபுரம், ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள்.

15-11-2026 | 12:20


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், பி.என் ரோடு, மில்லர் ஸ்டாப், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், அகில உலக அகண்ட பஜன் நடந்தது.

15-11-2026 | 12:20


முத்தியால்பேட்டை ஸ்ரீ சுந்தர விநாயகர் சுப்பிரமணிய சாமி சித்திவிநாயகர் கோயில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள் விழாவில், சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

15-11-2026 | 09:12


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடி ஏற்றத்துடன் திருகார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.

15-11-2026 | 08:11


மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் புதிதாக நிழற்குடையுடன் சிறுவர்-சிறுமியர் விளையாடுவதற்கான மைதானம் தயாராகி வருகிறது.

15-11-2026 | 06:46


ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மற்றும் மணாலி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ரோஹ்தாங் கணவாயில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதி வெள்ளை போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சி அளித்தது.

15-11-2026 | 06:41


வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த மாறுவேட போட்டியில் பங்கேற்ற மழலைகள்.

15-11-2026 | 06:37


மேற்காசிய நாடான ஓமனின் அல் அமரத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இளம் இந்திய வீரர்கள்.

15-11-2026 | 06:33


சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணி வீட்டில் சிறுமிகளின் சடலம் உள்ளதாக தகவல் வந்ததை எடுத்து போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அவரது வீட்டில் ஜே.சி.பி. உபகரணங்களுடன் தோன்டி சோதனை மேற்கொண்டனர்.

14-11-2026 | 21:40


கோயம்புத்தூர் காரங்க குசும்புக்காரங்கதாயா.. ராமாயண ஹீரோக்கு இப்படி அழகு குத்தி ரசிக்கிறாங்களே... இடம்: கோவை மரக்கடை

14-11-2026 | 21:39