மேலும் இன்றைய போட்டோ
கந்த சஷ்டி விழாவையொட்டி கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டத்தில் முருகரின் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
15-11-2026 | 22:53
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் சூரனை வதம் செய்ய சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணியர்.
15-11-2026 | 22:52
சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்கார விழா, கந்த சஷ்டி பெருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
15-11-2026 | 22:52
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்...
15-11-2026 | 22:14
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை உற்சவத்தில் ராஜகோபுரம் முன் விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியன், உண்ணாமுலை அம்மன் சமேதரா அண்ணாமலையார் பராசக்தி மற்றும் சண்டிகேஸ்வரர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் படைத்தனர்.
15-11-2026 | 22:13
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை, 6:47 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடிமரத்தில், கொடியேற்றம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். நவ., 24ல் மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
15-11-2026 | 22:13
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சண்முகநாதர்.
15-11-2026 | 22:13