இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கார்த்திகை மாதத்தின் முதல் நாளான, சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய அய்யப்ப பக்தர்கள்.
17-11-2026 | 11:25
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு உடுமலை எஸ்.வி.புரம் தத்வமஸி ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் அருள்பாலித்தார்.
17-11-2026 | 11:23
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்தனர்.
17-11-2026 | 06:54
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்கள் மற்றும் வாயை மூடிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர். இடம்: கோவை பி.என்.புதூர்.
16-11-2026 | 23:46
பல இடங்களில் மரங்கள் வெட்டப்படும் நிலையில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விதைப்பந்துகளை தயாரித்து குளங்களின் கரைகள் மற்றும் சாலை ஓரங்களில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி வீசி எறிந்து விதைத்தனர்.
16-11-2026 | 22:55
கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் வள்ள தெய்வானை சமேத அருள்பாலித்த சுப்ரமணியசுவாமி.
16-11-2026 | 22:55
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் நான்கு கோவில்களின் ஆறு தேர்கள் திருவீதியுலா வந்த ரத சங்கமம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
16-11-2026 | 22:54