உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி மாநில காவல் தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

18-11-2026 | 14:31


மேலும் இன்றைய போட்டோ

மாநகராட்சி சார்பில், செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

18-11-2026 | 14:36


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

18-11-2026 | 14:32


கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவர்கள்.

18-11-2026 | 14:32


மோசமான நிலையில் மாறி வருது கோவை அவினாசி ரோடு. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதான் இதிலே மிகவும் வேதனைக்குரியது. இடம்: பீளமேடு

18-11-2026 | 14:31


இந்த கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல அளவுக்கு அதிகமாக கூட்டங்களை ஏற்றி செல்லப்படும் அரசு பஸ். இடம்: கோவை பி.என்.புதூர்.

18-11-2026 | 14:24


கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

18-11-2026 | 14:23


வாகன ஓட்டிகளை அலறவிடும் ஆர்.ஜி.வீதி.! கோவை டவுன்ஹால் ரங்கே கவுடர் வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சரக்கு வாகனங்களை ஒரு வரிசையில் நிறுத்தி மட்டுமே சரக்குகளை இறக்க வேண்டும். ஆனால் இரண்டு மற்றும் மூன்று வாகனங்களை அடுத்தடுத்து நிறுத்துவதால் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

18-11-2026 | 14:10


வங்கக்கடலில் அக்வான் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் கடற்கரை ஓரங்களில் லேசான காற்றுடன் பனி மூட்டமாக வானிலை காட்சி அளித்தது.இடம்: கொட்டிவாக்கம்.

18-11-2026 | 07:32


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..

18-11-2026 | 07:31