இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாஇடையே நாளை மறுநாள்( நவம்பர் 19) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
18-11-2026 | 22:50
காஷ்மீரின் குல்காம் மாவட்டம், தேவ்சர் ஜங்கல்போரா கிராமத்தில் ராணுவத்தினருடன் நீண்ட நேரம் நடந்த சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி லத்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை வெற்றி சைகை காட்டி கொண்டாடிய ராணுவத்தினர்.
18-11-2026 | 22:50
ஊட்டி அருகே எம்.பாலாடா பகுதியில் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த ஆறு தூர்வாராத காரணத்தால் ஓடை போல மாறியதால், இங்குள்ள விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவமதிப்படும் சூழல்.
18-11-2026 | 22:50
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உடன் கலெக்டர், வந்தனா கார்க் எஸ்பி உதயகுமார், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.
18-11-2026 | 22:50
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம் நாள் காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
18-11-2026 | 22:50
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் திருவிழா நாளை மறுநாள் நடைபெறும் வெள்ளி தேரோட்டத்திற்காக வெள்ளி தேரை சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
18-11-2026 | 22:49