உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி தடுப்பு சுவர் சேதமடைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

19-11-2026 | 20:00


மேலும் இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சசியில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாமினை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்து பேசினார்.

19-11-2026 | 20:01


திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் பிசான பருவ நெல் சாகுபடிக்காக பயிடப்பட்டுள்ள நெல் விதைகளை பறவைகளிடமிருந்து பாதுக்காக்க புடவைகள் வைத்து மூடி வைத்துள்ள விவசாயிகள்...

19-11-2026 | 20:00


விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் திடீர் உள்வாங்கியதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சிமெண்ட் போட்டு மூடி வைத்துள்ளனர்.

19-11-2026 | 20:00


கோவை மண்டல அறிவியல் மையத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

19-11-2026 | 20:00


கார்த்திகை தீப பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம், வாகைகுளம் பகுதியில் விற்பனைக்கான தயாராகும் பித்தளை விளக்குகள்...

19-11-2026 | 19:59


மேஜர் முகத் வரதராஜன் சாலை_ தாம்பரம் வெளி வட்டசாலையை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

19-11-2026 | 19:59


கொளத்தூர் எம்எல்ஏ வி எஸ் பாபு இறந்ததை முன்னிட்டு தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் அவரது உடல்.இடம் : நுங்கம்பாக்கம்

19-11-2026 | 19:58


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக கவர்னரை முதல்வர் விஜய் பார்க்க வந்தார் அப்பகுதியில் முதல்வரை பார்க்க காத்திருந்த மக்கள்.

19-11-2026 | 19:57


முரசு புயலில் சிக்கி உயிரிழந்த, ஒன்பது மீனவர்களின் குடும்பத்திற்கு, 20 லட்ச ரூபாய் நிவாரணம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி, காசிமேடு வளாகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19-11-2026 | 19:56