உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

முகத்தில் முகம் வைத்து... வீட்டின் ஜன்னலில் தனது முகத்தை பார்த்து கொத்திய தேன் சீட்டு பறவை. இடம்: நாடார் தெரு, ராமநாதபுரம்.

20-11-2026 | 17:10


மேலும் இன்றைய போட்டோ

காலை பனியில் தென்னை மரங்களுக்கு இடையே காணப்படும் ஆதவன். இடம்: உடுமலை.

20-11-2026 | 10:50


உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட களத்தில் காய வைக்கப்பட்டுள்ள பாக்குகள்.

20-11-2026 | 07:48


சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகம் முழுவதும், கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20-11-2026 | 07:42


கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைகுகை வழியாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள், இதமான காற்றில், இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் பயணிக்கும் தருணம். அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகளை நிச்சயம் பதிவு செய்யும்.

19-11-2026 | 23:06


கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு பசுமையான தேயிலை எஸ்டேட். இதனிடையே வளைந்த நெளிந்து செல்லும் பாதையில் டீ கோப்பையுடன் போட்டோ எடுக்க வசதியாகவரவேற்கும் செல்பி பாயின்ட். இடம்: மாணிக்கா எஸ்டேட், வரலாறு.

19-11-2026 | 23:06


ஒடிசா மாநிலம் புரி கடற்கரைப் பகுதியில் இன்று பகல் 'அக்வான்' புயல் கரையைக் கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையொட்டி, கடலோரக் கடைகள் பாலிதீன் தாள்களால் மூடப்பட்டுள்ளன.

19-11-2026 | 23:06


மஹாராஷ்டிராவில் 1993ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு களுக்குக் காரணமான தாவூத் இப்ராஹிம் முன்பு வசித்த தன் ஆரம்பகால நடவடிக்கைகளுக்குத் தளமாகப் பயன்படுத்திய பாழடைந்த கட்டடம் நேற்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இடம்: பிண்டி பஜார், மும்பை.

19-11-2026 | 23:05


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப் படுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால், ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாதையில் குவிந்திருந்த மண், பாறைகள் அகற்றப்பட்டதை அடுத்து, 26 நாட்களுக்கு பின், இன்று முதல் ஊட்டிக்கு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது.

19-11-2026 | 23:05


நிலச்சரிவு காரணமாக ரத்து செய்திருந்த ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து,26 நாட்களுக்கு பிறகு, இன்று(நவம்பர் 19) முதல் மீண்டும் ஓடத் துவங்கியது.

19-11-2026 | 23:05