உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 2027 ம் ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள ஹரித்துவார் அர்த்த கும்பமேளாவை முன்னிட்டு புகழ்பெற்ற ராம் ஜூலா பாலத்தை புதுப்பித்து சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

25-11-2026 | 22:16


மேலும் இன்றைய போட்டோ

திருவண்ணாமலை 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில், அருணாசலேஸ்வரர் கோவிலும், நகரமும் மின் விளக்கு ஜொலிக்கும் அழகு காட்சி.

25-11-2026 | 22:17


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நிறைவாக அய்யங்குளத்தில் தெப்பம் உற்சவத்தில், சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

25-11-2026 | 22:17


திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழா முடிந்தவுடன் சிறப்பு மூலம் ரயிலில் ஊர் திரும்பும் பக்தர்கள்.

25-11-2026 | 22:17


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள 2,668 அடி உயரமுள்ள மகா தீபம் ஏற்றப்பட்ட மலை மீது ஏற இரண்டாவது நாளாக தடை செய்யப்பட்டு, பாதையை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

25-11-2026 | 22:17


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முடிந்தவுடன் சுவாமி தரிசனம் செய்ய இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

25-11-2026 | 22:16


திருவண்ணாமல கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி முடிந்த பிறகு கிரிவலப் பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் சேலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

25-11-2026 | 22:16


திருவண்ணாமலையில் அதிகாலை பெய்த மழையால் கிரிவலப் பாதையில், மழை நீர் தேங்கியதால் நடந்து செல்ல பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

25-11-2026 | 22:16


குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதால், டிரோன் சர்வே ஆய்வு பணி நடந்தது.

25-11-2026 | 22:16


பொது மக்களுக்கு இடையூறாக இயங்கும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மிண்ட் சுப்புராயன் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அதிகாரிகள் அகற்றாததால் அதிருப்தியடைந்த அப்பகுதிமக்கள் பூட்டு சங்கிலியுடன் கடையை முற்றுகையிட்டனர்.

25-11-2026 | 22:15