உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவில், தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் சுவாமி தரிசனம்செய்தனர். பின்னர் கலெக்டர் வந்தனா கார்க் பிரசாத பைகளை வழங்கினார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

26-11-2026 | 21:46


மேலும் இன்றைய போட்டோ

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள் ஜொலிக்கின்றன. பின்னணியில், அண்ணாமலையார் மலை உச்சியில் எரிந்து கொண்டிருக்கும் மகா மகாதீபம். இடம்: திருவண்ணாமலை, வேட்டவலம் ரோடு

26-11-2026 | 21:47


திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பிரசாதம் பையை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பிரசாத பையை அள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள். தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் ஒருவர் மயங்கினார். சிகிச்சைக்காக சக ஊழியர்கள் தூக்கி சென்றனர்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பிரசாதம் பையை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தாங்களாகவே முந்தியடித்துக் கொண்டு பிரசாத பையை அள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ரமணாஸ்வரம் அருகே சுவாமி வந்து போது காவல்துறை வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடாததால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்தையொட்டி, சுவாமி கிரிவலம் வந்து போது ரமணாஸ்வரம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகனங்களுக்கு இடையே சிக்கிய அண்ணாமலையார்.

26-11-2026 | 21:46


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்தார். வழிநெடுக்க வழிபட்ட ஏராளமான பக்தர்கள்.

26-11-2026 | 21:42


திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரில், குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய, 26 குரங்குகள், வனப்பகுதியில் விடப்பட்டன.

26-11-2026 | 21:22


subboxhd@புத்தகம் வெளியீடு பெங்களூரு, ஹெப்பாலில் உள்ள, ஜி.கே.வி.கே., வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய வேளாண் வானிலை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்ட, வேளாண் காலநிலை சேவைகள் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் புத்தகத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடரமணா, அமெரிக்க பேராசிரியர் வரபிரசாத், கோபால் கிருஷ்ண பத்ரா உள்ளிட்டோர்.

26-11-2026 | 20:46