உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று சப்தா வர்ண சப்பரத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.

26-11-2026 | 22:30


மேலும் இன்றைய போட்டோ

இளம் அரசியல் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க இஸ்ரேல் நாட்டிற்கு செல்லும் அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன், கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

26-11-2026 | 21:56


மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள் ஜொலிக்கின்றன. பின்னணியில், அண்ணாமலையார் மலை உச்சியில் எரிந்து கொண்டிருக்கும் மகா மகாதீபம். இடம்: திருவண்ணாமலை, வேட்டவலம் ரோடு

26-11-2026 | 21:47


திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பிரசாதம் பையை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பிரசாத பையை அள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள். தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் ஒருவர் மயங்கினார். சிகிச்சைக்காக சக ஊழியர்கள் தூக்கி சென்றனர்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பிரசாதம் பையை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தாங்களாகவே முந்தியடித்துக் கொண்டு பிரசாத பையை அள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவில், தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் சுவாமி தரிசனம்செய்தனர். பின்னர் கலெக்டர் வந்தனா கார்க் பிரசாத பைகளை வழங்கினார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ரமணாஸ்வரம் அருகே சுவாமி வந்து போது காவல்துறை வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடாததால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

26-11-2026 | 21:46


திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்தையொட்டி, சுவாமி கிரிவலம் வந்து போது ரமணாஸ்வரம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் வாகனங்களுக்கு இடையே சிக்கிய அண்ணாமலையார்.

26-11-2026 | 21:46


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்தார். வழிநெடுக்க வழிபட்ட ஏராளமான பக்தர்கள்.

26-11-2026 | 21:42