இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காசி தமிழ் சங்கமத்தின் 5ம் ஆண்டு நிகழ்வை துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். உடன், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற பங்கேற்பாளர்கள். இடம்: வாரணாசி, உ.பி.
29-11-2026 | 06:41
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், வேர்க்கடலை வரத்து அதிகரித்துள்ளது. சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள வேர்க்கடலைகளை தரம் பிரித்த தொழிலாளர்கள்.
29-11-2026 | 06:31
செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-11-2026 | 00:38
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்ட தீபத்தை புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இளைஞரணி தலைவர் ஷியாம், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
28-11-2026 | 23:16
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி மேரி கட்டிடம் சிவப்பு மின் விளக்கினால் ஜொலிக்கிறது
28-11-2026 | 22:40